தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் காவல்நிலைய வளாகத்தில் எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள்
நடப்பட்டது.
கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் மாவட்ட செயலாளர் ப. சங்கரநாராயணன் தலைமையில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.ஆடிவேல் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தங்களுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தெரு ஓரங்களில், சாலை ஓரங்களில், பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வெப்பத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல், மற்றும் தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளர் ப.சங்கரநாராயணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.