திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர்ஜவருகைதந்தனர். சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பழனி மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் மற்றும் சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து உறுதிமொழி ஏற்புக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை, திருக்கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வில் உறுதிமொழி ஏற்பு குழுவின் உறுப்பினர்களான அரவிந்த் ரமேஷ், சீனிவாசன், நல்லதம்பி, பூமிநாதன், மோகன், எம்.சக்கரபாணி, மணி, ஜெயக்குமார், அருள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மலைக்கோவில் அன்னதான சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.