திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி கிராமத்தில் வேடசந்தூர் எஸ்.ஆர். எஸ் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆபித், அஜய், அபிஷேக், பாரதி, தரணிதரன் ,திராவிட சிவரஞ்சன், ஐயப்பன், கார்த்தி, ஹர்ஷவர்தன் ஆகிய மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத்திட்டத்திற்காக சாலையில் விவசாயம் சம்பந்தமான கால வரைபடங்கள்,வளங்கள், சமூக வரைபடங்கள்,கிராம வரைபடங்கள், போக்குவரத்து வரைபடங்களை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாணவர்களின் உதவியுடன் வரைந்து அதனை விவசாயிகளுக்கும் , கிராமப்புற பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் அமரபூண்டி கிராம ஊராட்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா ,ஊராட்சி செயலாளர் தண்டபாணி, ஊராட்சி பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுடன் இணைந்து எஸ்.ஆர். எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
