அக் 27 கன்னியாகுமரி
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் “Youth Talks” என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளைஞர்களின் எதிர்காலம், கல்வி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார்.
நிகழ்வில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகர தந்தை ரே. மகேஷ், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் டெஸ்ஸி தோமஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று கேள்வி-பதில் அமர்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்வு முழுவதும் உற்சாகம் மற்றும் இளைய தலைமுறையின் ஆற்றலால் நிறைந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
