Headlines

நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்.

நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகராட்சி 46வது வார்டில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது,

​கோயம்புத்தூர் மாநகராட்சி , பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து நடத்தும் “நலம் காக்கும் ஸ்டாலின்” பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம், இரத்தினபுரி, 46-வது வார்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மற்றும் மத்திய மண்டலம் தலைவர் மீனா லோகு முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக இம்முகாமில் கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலத்திற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய “மருத்துவப் பாதுகாப்புப் பெட்டகம்” மற்றும் முதியோர்களுக்கு “மக்களைத் தேடி மருத்துவப் பெட்டகம்” ஆகியவற்றை வழங்கினார்.

​மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல், எலும்பு முறிவு, மகப்பேறு, குழந்தைகள் நலம், கண், பல், காது, மூக்கு, தொண்டை, தோல் சிகிச்சை, மனநல மருத்துவம் மற்றும் சித்தா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பு மருத்துவர்களால் பொதுமக்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஈசிஜி (ECG), எக்கோ (ECHO), ஸ்கேன், எக்ஸ்-ரே மற்றும் இரத்தப் பரிசோதனைகளும் இலவசமாகச் செய்யப்பட்டன.

​இந்நிகழ்வில் மாநகர நகர்நல அலுவலர் மருத்துவர் மோகன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், இரத்தினபுரி பகுதி பொறுப்பாளர் கோவை லோகு, 46-வது வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் பாச குமார், பூபாலன், ஆறுமுகம், மற்றும் it wing R.K.சுரேஷ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு இம் மருத்துவ முகாமில் பயன்பெற்றனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *