தைத்திருநாளில் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, தமிழர் நலத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்கள் அனைவரும் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடி மகிழ்ந்திட திராவிட மாடல் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் , கோவை மாநகர் மாவட்டம் திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் MC அவர்கள் வழங்கிய போது இந்நிகழ்வில் வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி துணைச் செயலாளர் என்.ஜெ.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.