அக் 02. உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி புதிதாக கல்வியை தொடங்கும் குழந்தைகளுக்கு விஜயதசமி நாளான இன்று கல்வியை தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக வருவார்கள் என்பது ஐதீகம்.
வித்யா என்றால் கல்வி என்று பொருள், கல்வி எனும் வித்யா வை ஆரம்பிக்கும் நாளை வித்யாரம்பம் என்று அழைக்கின்றனர், இதனிடையே திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது, உடுமலையில் உள்ள உடுமலை திருப்பதி கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நாக்கில் அருகம் பிலால் ஓம் என்ற ஓம்கார எழுத்து எழுதப்பட்டு கல்வி தொடங்கப்பட்டது, இவ்வாறு செய்வதால் தங்கள் குழந்தைகள் கல்வியில் பெரும் வெற்றி பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
