உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ப்ரியா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் மற்றும்புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை உடுமலைப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி சி. ராஜலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார், அவருடன் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் டி. நித்யகலா, அரசு வழக்கறிஞர் சேதுராமன் மற்றும் வழக்கறிஞர்கள் .மகேஸ்வரன், விஜயகுமார், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோரும் கல்லூரி பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.
பேரணி உடுமலை சார்பு நீதிமன்ற வளாகத்தில் துவங்கி மத்திய பேருந்து நிலையம் வரை சென்றது. இதில் கல்லூரியின் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உடுமலை : நிருபர்: மணி