விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது அடிப்படை மற்றும் இன்றியமையா தேவை மற்றும் உரிமைகள் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வார்டிலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டி புகார் மற்றும் ஆலோசனைப் பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் எனவும்,
தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகராட்சிகளில் நடைமுறைப்படுத்துவதை போன்று விழுப்புரம் நகராட்சியிலும் பொதுமக்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவிடுவதற்கு ஏதுவாக வாட்ஸ் ஆப் நம்பரை அறிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கழக மாநிலப் பொருளாளர் மு.ஆரியசாமி கோரிக்கை முன் வைத்துள்ளார்,
விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி, நகர் மன்றத் தலைவி தமிழ்ச் செல்வி பிரபு ஆகியோர் இக் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றிட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
