Headlines

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..

மதுரை :
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் கழகப் பொதுச்செயலாளர் ஆலோசனைப்படி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் வெங்கல மூர்த்தி அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்த முக்கியமான கிராம சபை கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊராட்சி கழகத் தோழர்கள், கிளை கழக நிர்வாகிகள், பூத் கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள், அமைப்பு பலப்படுத்தல், மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் அவர்கள், “தமிழக வெற்றி கழகம் மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் இயக்கம்.

ஒவ்வொரு கிராமத்திலும் கிளை மற்றும் பூத் கழகங்களை வலுப்படுத்தி, பொதுமக்களின் தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தீர்வு காண்பதே கட்சியின் முக்கிய இலக்கு” எனத் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை கட்சியின் செயல்பாடுகளில் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிராம பொதுமக்கள் தரப்பில் அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை கவனமாக கேட்டுக் கொண்ட மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த கிராம சபை கூட்டம் மூலம் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே உறுதியான தொடர்பு ஏற்படுத்தப்பட்டதுடன், தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்கும் அமைப்பு வலிமைக்கும் முக்கியமான அடித்தளமாக அமைந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர்
M. மருது பாண்டியன், இணை மாவட்ட செயலாளர் R.மதன், ஒன்றிய செயலாளர் தலைவா செந்தில்
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தனக்கன்குளம் ஊராட்சி செயலாளர் B. ஜெகதீஷ் குமார், தனக்கன்குளம் கிளைச் செயலாளர் கணேசன், நேதாஜி நகர் கிளைச் செயலாளர் முத்துராம், M G R நகர் கிளைச் செயலாளர் அஸ்வா, PRC காலனி கிளை செயலாளர் கணேசன், வெங்கல மூர்த்தி நகர் கிளைச் செயலாளர் முகேஷ் பாபு, திருவள்ளுவர் நகர் கிளைச் செயலாளர் பாரதி மற்றும் இளைஞரணி சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கூட்டத்தின் முடிவில், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, வரும் காலங்களில் மக்களுக்காக தொடர்ந்து போராடுவது என்ற உறுதியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *