கன்னியாகுமரி, அக். 02 –
இந்த விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் தமிழ் துறையின் விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினருடன் இணைந்து டாக்டர் திரு. வேல்ராஜ் நிகழ்வில் பங்கேற்று மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.
இந்த நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான சூழ்நிலையில் நடைபெற்றது.
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் – பாவலர் ரியாஸ்
