32 சவரன் நகை கார்பிய சொகுசு கார் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!
திருப்பூர் உடுமலை தாராபுரம் காங்கேயம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரை பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகமூடி கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முகமூடி சம்பவங்கள் திருடர்கள் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவுப்படி கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் ஆலோசனை படியும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா மேற்பார்வையில் குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து பிடிக்க உடுமலை மற்றும் காங்கேயம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சட்டீஸ்கர் முருகன் சிவகுரு(45) சேலம் பகுதியை சேர்ந்த ராஜா( 40) கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்(34) மற்றும் தங்கராஜ்(55) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 32 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கார்பியோ வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யபட்டது.
செய்தியாளர் :- மணிவேல்