திருநெல்வேலி,நவ.15:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட, “முருகானந்த புரம்” எனும் ஊரில், திருச்செந்தூர்- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்செந்தூரில் இருந்து, 83 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து, இன்று( நவம்பர்.15) காலை சுமார் 9.30 மணி அளவில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. பேரூந்தில் பயணம் செய்தவர்களில், 27 நபர்களுக்கு “லேசான காயம்” ஏற்பட்டது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கூடங்குளம் காவல்துறையினர், காயம்பட்ட நபர்களை மீட்டு, உடனடியாக கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கும், நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து சம்பந்தமாக, கூடங்குளம் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
