விழுப்புரத்தில் உள்ள சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 325 கல்குவாரிகளில் 25 மட்டுமே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன மற்றவை அரசுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் இந்நிலை விழுப்புரம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார்.
அதேபோல் மணல் குவாரிகளில் எஸ்.ஆர் என்கிற தனியார் நிறுவனம் நடத்தி வரும் தனிநபர் அரசிடம் அனுமதி வாங்கியதாக கூறி 4730 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் அந்த நபருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தை தவிர வேறு நிறுவனம் அரசுக்கு இல்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திவரும் அதிகாரிகள் மீது விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர போவதாகவும் மேலும் விரைவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.
