கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 77வது குடியரசு தின விழா இன்று இளங்கடை பகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சாதிக் அலி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில செயலாளர் பிஜுருல் ஹபீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில துணைச் செயலாளர் மிஸ்பா ஆலிம் குடியரசு தின உரையாற்றினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமீர்கான் குடியரசு தின கோஷங்களை எழுப்பினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி அலங்காரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் யாசிர் அரபாத், மாவட்ட வணிகர் சங்க செயலாளர் சம்மில், நாகர்கோவில் மாநகர செயலாளர் இடலை M.H. சாகுல், கோட்டார் கிளைச் செயலாளர் நியாஸ், கிளை துணைச் செயலாளர் அப்துல் லத்தீப், கிளை பொருளாளர் தர்வேஸ் மீரான், ஆட்டோ தொழிற்சங்க தலைவர் கரீம், செயலாளர் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் கட்சியினர் ஆதில், அமீன், ரியாஸ், கோதர் அலி உள்ளிட்ட பலரும், பொதுமக்களும் ஏராளமாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
