அக் 03 –
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. மு. அப்பாவு எம்.எல்.ஏ., அவர்களை அவரது இல்லத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் டாக்டர் கிரஹாம் பெல் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் மு. சிவராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்திய இந்த நிகழ்வு, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் கழகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.
மாவட்ட செயலாளர் டாக்டர் கிரஹாம் பெல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் எதிர்காலப் பணிகள், மாவட்ட வளர்ச்சி, சட்டமன்ற தொகுதி நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்களிடம் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கழகத்தின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தும் உறுதியையும் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கழக நிர்வாகிகளின் செயற்பாடு நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது என்பதையும், மக்கள் நலனுக்கான திட்டங்கள் விரைவில் நடைமுறை படுத்தப்படும் என்பதையும் இச்சந்திப்பு வெளிப்படுத்தியது.
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.
