முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி பழனி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆண்டிச்சாமி என்ற ராஜேஷ் பொறுப்பு வகித்து வருகிறார்.
முன்னதாக இவர் பழனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் ,அதில் கூறியிருப்பதாவது ..
அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர் திருப்பூர் கர்ணன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கர்ணன் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் என்பவரை
செல்போனில் தொடர்பு கொண்டு, நீ அந்த கட்சியில் இருக்கக் கூடாது மேலும் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் நீ எவ்வாறு செயல்படலாம் என கேட்டுள்ளார் .
அது மட்டும் இன்றி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவனை தகாத வார்த்தையால் பேசியதுடன்,அவரை ஓட ஓட விரட்டி வெட்டுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் கர்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தும், கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் மற்றும் எங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என பழனி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
முன்னதாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆண்டிச்சாமி என்ற ராஜேஷ் தலைமையில் கட்சியின் நகரச் செயலாளர் பொன்ராம் , நகரத் தலைவர் ஸ்வீட் ராஜா, இளைஞர் அணி பொருப்பாளர் செல்வா; மற்றும் TUCC மாநில குழு உறுப்பினர் ஏ.எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி