பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…