மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தின் சேர்ந்த பொருளாளர் ஜெயபாரதி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் தினசரி ஐந்து ரூபாய் அடாவடியாக வசூல் செய்து வருகிறார் அதற்கு பேர் பிச்சையா? அல்லது மாமூலா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளார்கள்.

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தயிர் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிடம் தினசரி ஐந்து ரூபாய் வசூலித்து மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே மதுரை மாநகராட்சி வருவாய் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தற்போது கம்யூனிஸ்ட் கட்சியை சங்கத்தை சேர்ந்த பொருளாளர் ஜெயபாரதி காய்கறி நடத்தி வரும் கடைக்காரரிடம் தினசரி ஐந்து ரூபாய் வசூல் செய்து வருகிறார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அவருக்கு இருப்பதால் மதுரை மாநகராட்சி அவர் மீது நடவடிக்கை பயப்படுகிறதா என்று வியாபாரிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
