Headlines

கோவையில் 50- ஆண்டுகாலமாக பள்ளிக்கூடம் நடத்தி தனது விசுவாசத்தை சொந்த மாநிலமான கேரளாவுக்கு காட்டிய நிர்வாகம்.

கோவையில் 50- ஆண்டுகாலமாக பள்ளிக்கூடம் நடத்தி தனது விசுவாசத்தை சொந்த மாநிலமான கேரளாவுக்கு காட்டிய நிர்வாகம்

தமிழ்நாட்டில் கோவையில்50 ஆண்டு காலமாக நடந்து வரும் பள்ளி அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக பேண்ட் இசை குழு பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தென்னிந்திய அளவில் தெலுங்கானாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பேண்ட் வாத்திய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அவிலா பள்ளி முதலிடம் பெற்றது.

போட்டி நடந்து 20 நாட்களுக்கு பிறகு டெல்லியில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்கும் அணிகள் பட்டியலில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி முறைகேடாக , கேரள மாநில பள்ளி ஒன்றின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம் இதை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வைத்து இருந்தது, இந்த தகவல் அறிந்து பெற்றோர் அவிலா பள்ளியில் பிரச்சினை செய்த நிலையில் பள்ளி நிர்வாகம் தங்களுக்கே தாமதமாக தான் தெரிந்தாக கூறியுள்ளது.

தமிழகத்தின் சார்பில் தேர்வான கோவை அவிலா பள்ளி பேண்ட் வாத்திய குழு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் வாசிப்பதை திட்டமிட்டே பள்ளி நிர்வாகம்விட்டு கொடுத்து இருப்பதாகவும் பெற்றோர் தகவல் தெரிவிக்கின்றனர்.

அவிலா பள்ளி மாணவிகள் டெல்லி செல்லும் உரிமையை கேரளாவிற்காக விட்டு கொடுத்தது யார் என்பதை விசாரிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர். மனு அளித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தற்பொழுது வரை தெரியவில்லை, எனவே, மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களும். இந்த விவகாரத்தின் தலையிட்டு தமிழகத்தின் உரிமையை மீட்டுத் தருமாறு மாணவிகளும்,பெற்றோரும்,மிகவும் வருத்தத்துடன்கேட்டுக் கேட்டுக் கொடண்டார்கள்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *