தென்னிந்திய திருச்சபையின் [டயோசீசன்] கீழ்,பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள, பழைமைவாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான, “கதீட்ரல்” ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் “விலையில்லா” மிதிவண்டிகள் வழங்கும் விழா குழந்தைகள் தினமான, இன்று [நவ.14] காலையில், நடைபெற்றது. இவ்விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மொத்தம் 230 மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இது போன்ற நலத் திட்டங்களின் பயன்பெறும் மாணவர்களாகிய நீங்கள் படிப்பில், அதிகக் கவனம் செலுத்தி, நன்றாக படித்து, முதல் நிலையில் தேர்ச்சி பெற்று, படிப்பை முழுமையாக நிறைவேற்றி, உன்னதமான பணிகளில் அமர்ந்து, நாட்டுக்கும்- வீட்டுக்கும் பயனுள்ளவர்களாக வாழவேண்டும்!” – என்று, கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதி பிரபு, திருநெல்வேலி சி.எஸ்.ஐ.திருமண்டல குருத்துவச்செயலாளர் பாஸ்கர் கனகராஜ், பள்ளித் தாளாளர் சாலமோன் டேவிட், குருவானவர் அருட்திரு ஜே.ஐ.இ.சுதர்சன், மத்தியசபை மன்ற சேர்மன் அருட்திரு ஜெபராஜ், பள்ளி தலைமையாசிரியர் டேவிட் தனபால், உதவித் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் உட்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்