திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சங்கர் பாபு ஆலோசனை நடத்தினார் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். திமுக அரசு மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி யாக 309 ஆவது வாக்குறுதி தமிழக அரசு பங்களிப்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு பொறுப்பேற்று 42 மாதங்கள் கடந்த பின்பும் எங்களுக்கு எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. நாங்கள் சத்துணவு திட்டத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி ஆசிரியர்களாக கிரேடு1,2, பணி செய்து வருகின்றோம் ஓய்வு பெற்ற எங்களுக்கு வருகின்ற 25, 26ம் தேதி பட்ஜெட் தொடர் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி தருமாறு இக்கூட்டத்தில் தெரிவிக்கின்றோம். தேர்தல் வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றவில்லை என்றால் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னைசமூக நலத்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரள் முற்றுகை,மற்றும் மறியல் போர் நடைபெறும். இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ராஜவேல் துறை மாவட்டத் தலைவர்,மதுபாலன் மாவட்ட பொருளாளர் சுப்பையன் மாவட்டத் துணைத் தலைவர், தௌலத்பீபி மாவட்ட செயலாளர், ரேணுகாதேவி மகளிர் மேல் பார்வையாளர் ஓய்வு மாவட்டத் துணைச் செயலாளர், மற்றும் பாஸ்கரன் மாவட்டத் துணைத் தலைவர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.