வாணியம்பாடி,செப்.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான புத்தொளிப் பயிற்சி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தி.அப்சர்பாஷா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் எஸ்.காதர் நவாஸ் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் முஜிபுர் ரகுமான் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் எஸ்.அப்துல் கரீம் கலந்து கொண்டு நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபட முன்வர வேண்டும் மற்றும் தனக்குள்ள ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் கல்லூரி சுற்றுச்சூழல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாணவர்களிடம், சுற்றுப்புறச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். வாணியம்பாடி இந்தியன் எவர்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து மறுக்கன்றுகள் நடும் விழாவில் செயலாளர் ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் அ.அஸ்கர், முனைவர் சயீயுத்தின் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் முனைவர் ஜி.ஹரிகரன் நன்றி கூறினார்.