அக் 07, கன்னியாகுமரி –
நாகர்கோவில் மாமன்ற 39ஆம் வார்டு உறுப்பினராக இருக்கும் பாத்திமா ஹிதாயத் அவர்களின் கணவர் ஹிதாயத் தற்போது நகரம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து “அத்தியாவசிய தேவைகளுக்காக” பல ஆயிரம் ரூபாய்கள் முதல் லட்சங்கள் வரை பெற்றுக்கொண்டு, தேவைகள் நிறைவேற்றாமல் பின் தட்டி கழிப்பவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஹிதாயத்துடன் ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண், “நான் கொடுத்த ₹17,000க்கு ரசீது தரவே மாட்டீங்களா?” என்று கேட்டபோது,
ஹிதாயத், “என்னுடைய அலுவலகத்துக்கு வாங்க… ஃபார்முலா சொல்லித் தருகிறேன்,” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதனால், “அந்த ஃபார்முலா என்னவாக இருக்கும்!” என்ற கேள்வி தற்போது நகரம் முழுவதும் பேசப்படுகிறது.
அந்த ‘ஃபார்முலா’வில் என்ன இருக்கிறது என்பதை அறிய மக்கள் ஆவலுடன் அலுவலக வாசலில் காத்திருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் “ஹிதாயத் ஃபார்முலா” என்ற உள்ளடக்கம் பரவி வருகிறது.
மேலும், மாமன்ற உறுப்பினரின் கணவர் திமுக மாவட்ட தலைமையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் யாரும் அவரிடம் கேள்வி கேட்க முடியவில்லை என வட்டார நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, “அந்த ஃபார்முலா, திமுக ஸ்பெஷலா?”, “அவர் அலுவலகத்தில் கெமிஸ்ட்ரி பிராக்டிக்கல் நடக்குதா?” என்று நாகர்கோவில் முழுவதும் நகைச்சுவையாக பேசிக்கொள்கின்றனர்.
