நடக்க ரோடு இல்லை,தெருவிளக்கு இல்லை, இரவு 6 மணிக்கு மேல் யானை புலி அட்டகாசம் …சுதந்திரமாக நடமாட வாய்ப்பும் இல்லை… பாதுகாப்பில்லை ……
கூடலூர் சட்டமன்றம் தொகுதி, நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிவயல் கிராமத்தில் மக்கள் நடக்க நடபாதையில்லாமல் கொட்டும் மழையில் சுதந்திரதின நிகழ்ச்சி கொண்டாடினர்…
தோழர் மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்..திரு கிட்டன் செட்டி அவர்கள் தேசிய கொடியேற்றினார் , தோழர் பெரியார் மணிகண்டன், ராகவன் சிறப்புறையாற்றினர்..
தோழர் ராஜகோபால் இனிப்பு வழங்கி ,தோழர்கள் ரெஜிதா ,வாசு,பரமன், சந்தோஷ், ரமேஷ்(எ)அச்சாயன் ,சேரன்,ஸ்ரீதரன் ஆகியேர் முன்னிலை வகித்தனர் சாஜி நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவுபெற்றது இதில் ஏராளமான அப்பகுதி கிராமமக்கள் கலந்துக்கொண்டனர்…..
