திருநெல்வேலி,டிச.22:-
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், “மேலச்செவல்” பகுதியில், சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கான புதிய காவல்நிலையத்தை, இன்று (டிசம்பர். 22) காலையில், “முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின், “காணொளி காட்சி” ( VIDEO CONFERENCING) மூலம், திறந்து வைத்தார். அதே நேரத்தில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், மேலச்செவல் காவல் நிலையம் செயல்படும் கடடிடத்தினை திறந்து வைத்து, “குத்து விளக்கு” ஏற்றி, காவல் நிவலையத்தினை முழுமையாக பார்வையிட்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கினனார்.
மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களின் பட்டியலில், மேலச்செவல் காவல் நிலையம், 35- வது காவல் நிலையம் ஆகும், இந்த புதிய காவல் நிலையத்தின், முதலாவது காவல் ஆய்வாளராக, ரெகு ராஜன் பொறுப்பேற்றுள்ளார். இந்த காவல் நிலையத்தின் கீழ் மேலச்செவல் மற்றும் அதனை சுற்றியுள்ள, 10 தாய் கிராமங்களும், 12 குக் கிராமங்களும், கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் இதுவரையிலும், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தின் கீழ் இருந்து வந்தன! என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
