செப் 17 கன்னியாகுமரி :
கன்னியாகுமரி, தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் (முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் S.R. மாதவன், இணை செயலாளர் M. பிரேம்குமார் மற்றும் துணை செயலாளர் V. சாலமன் ஆகியோர் தலைமையேற்றனர்.
பகுத்தறிவு பகலவனாக புகழப்படும் நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவரை மரியாதையுடன் நினைவுகூர்ந்து வணங்கினர்.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பெருமளவிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பெரியாரின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்புவோம் என்று உறுதியெடுத்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
