திருநெல்வேலி,நவ.22:-
தமிழ்நாடு “முதலமைச்சர்” முக ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு {2025} ஆகஸ்ட் மாதம், 2- ஆம் தேதி துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” “சிறப்பு மருத்துவ முகாம்” ஒவ்வொரு சனிக்கிழமையும், அந்தந்த மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி புறநகர் வட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள, “அகஸ்தியர்பட்டி” தனியார் பள்ளி வளாகத்தில், இன்று { நவம்பர்.22} இந்த முகாம் நடைபெற்றது.
இதில், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இருதய வரைபடம் எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே ஆகியவையும், முழுமையான ரத்தப்பரிசோதனை, காசநோய், தொழுநோய் போன்றவற்றை கண்டறியும் பரிசோதனைகள், ஆரம்பக்கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் ஆகியவையும், மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தவிர, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயவியல், மகளிர் நோய், மகப்பேறு, எலும்பியல், நரம்பியல், மனநலம், நுரையீரல், தோல் நோய், காது- மூக்கு- தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் இயன்முறை சிகச்சை உள்ளிட்ட, மொத்தம் 17 வகையான, சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இம்முகாமில் 36 மருத்துவ நிபுணர்கள், 275 பணியாளர்கள், பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கி, வருகின்றனர். இனிவரக்கூடிய வாரங்களில் கங்கைகொண்டான், நடுக்கல்லூர், சங்கர் நகர், தளபதி சமுத்திரம் ஆகிய ஊர்களில், இந்த “நலம் காக்கும் ஸடாலின்!” சிறப்பு மருத்துவ முகாம்கள், நடைபெறவுள்ளன.
இன்று {நவம்பர்.22} நடைபெற்ற முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் விஜய சந்திரன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பரணிசேகர், வட்டார மரத்துவ அலுவவலர் டாக்டர் அர்ச்சுணன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தோமதாஸ், சிவந்திபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெகன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
