Headlines

விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் – காமராஜர் – பெரியார் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் சகோதரி மாலை அணிவித்து மரியாதை…

விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் – காமராஜர் – பெரியார் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் சகோதரி மாலை அணிவித்து மரியாதை...

நாகர்கோவில் மாநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட செயலாளர் சவுத்ரி அவர்கள் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வு கன்னியாகுமரி மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் மற்றும் மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் சேக் முகமது, குளச்சல் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சுபாஷ், புழங்கோடு சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் தேவகி, மகளிர் விடுதலை இயக்க நாகர்கோவில் பொறுப்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் வழக்கறிஞர் கணேஷ், யுவன் ராஜன், மனோ சாது, பாபு, ஞானசேகர், கருணாநிதி, கன்னங்குளம் ராஜன், முஜிப் ரஹ்மான், செல்வி, கருப்பு ரெஜி, அபுதாஹிர், யாசர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *