மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளராக வேலை செய்து வரும் சேகர் மற்றும் அவரது மனைவி அமுதா அவர்களின் வீடு இன்று சுமார் 11 மணி அளவில் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது.

எனவே, வீட்டில் உள்ள பொருட்கள் கிரைண்டர் மிக்ஸி ஃப்ரிட்ஜ் சிலிண்டர் பீரோ கட்டில் மற்றும் நான்கு பேர் வசியக்கூடிய உடைமைகளை அனைத்தும் முழுவதும் சாம்பலாக ஆகிவிட்டது.
தற்போது உடுத்த துணி இல்லாமல் சாப்பாடு செய்து சாப்பிடுவதற்கு பாத்திரம் இல்லாமல் நீராகதியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
எனவே இவர்களுக்கு உதவி செய்து காப்பாற்றுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
அது மட்டும் இல்லாமல் இவர் வேலை தேவைப்படக்கூடிய உதாரணங்கள் கட்டிங் மெஷின் ஸ்டில் மட்ட பலகை கொளுர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்த நிலையில் நிற்கிறார்…
அரசு மூலம் உதவி பெறக்கூடிய ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஓட்டர் ஐடி போன்ற மிகவும் பயனுள்ளதாக இருக்க கூடிய எல்லா ஆவணங்களும் பீரோவில் சிக்கி கருகிவிட்டது.
இந்த பதிவை பார்த்த தோழர் சேகர் அவர்கள் உடனடியா வந்து பார்த்து மதிய உணவு கொடுத்து விட்டு சென்றார்..
அதன் பிறகு இப்போது சுமார் 5.30 மணி அளவில் இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார்.
தோழர் சேகர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.. CBS Bhaskar reporter viluppuram
