வணக்கம் தமிழக அரசியல் மூலம் நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்களுக்கு படம் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.
எழுதுவதற்கு நேரம் உள்ளதா என கலைஞர் அவரிடம் பலர் நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கும் போது கேட்டனர். அப்போது அவருக்கு வயது 60 ஆண்டு 1985, 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட உரையாடல்கள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள், பாடல்கள், முரசொலி இதழில் தொடர்களை உடன்பிறப்புகளுக்கு கடிதம் என அன்றைய காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து எழுதியவர் கலைஞர் அவர்கள்.! 1966க்கு முன் நிறைய ஓய்வு கிடைத்தது., காங்கிரஸ் அரசு அவரை சிறைச்சாலைக்கு அனுப்பிய போதெல்லாம் ஓய்வு கிடைத்தது. 66க்கு பிறகு அமைச்சரான பிறகும் கலைஞர் அவர்கள் எழுதினார் அதுதான் சிறப்பு.!
அமைச்சர் பணியின் அயர்வை சோம்பலை மன இருக்கத்தை போக்கும் அருமருந்தாக அமைந்தது எனது எழுத்து பணி தான் எனவும், முதல்வர் எனும் பணி தன் மீது சுமத்தப்பட்ட போது நான்கு ஐந்து ஆண்டுகளாக ஓட்டப்பந்தயத்தில் ஓடிவிட்டு வந்தவன் எலுமிச்சம்பழத் தண்ணீரை விரும்புவது போல நானும் களைப்பாற்றிக்கொள்ள கவிதை கட்டுரை கதை எழுதுவதை கடமையாக கொண்டேன் என்கிறார்.
குறிப்பாக பல்வேறு தலைப்புகளில் 30க்கும் மேற்பட்ட கவியரங்கங்களில் தலைமையேற்று கவிதை பாடி இருப்பது 66 லிருந்து 4.5 ஆண்டுகளில் தான் தனது புகைவண்டி பயணத்தில் தனது பெரும்பாலான கதை கவிதை கட்டுரைகளை எழுதியதாக சொல்லும் கலைஞர் அவர்கள் அதை அவரே செயல்படத்தவும் சொல்கிறார். புகைவண்டி பயணத்தில் இரவு 10 மணி ஆகிவிட்டால் கொட்டாவி விடுவது போல் செய்வாராம் அருகில் உள்ளவர்கள் தூக்கம் வந்துவிட்டது போல் நினைத்து வெளியே சென்றவுடன் கதவை தாழிட, முப்பது பக்கத்தை எழுதி முடித்துவிட்டோம் என்ற மனநிறைவோடு அதிகாலை 5 மணிக்கு தூங்கி, ஆறு மணிக்கு இறங்க வேண்டிய ஊரில் கண் விழித்து எழுவது தனி சுகம் என்கிறார்.
எவ்வளவோ பணிகளுக்கு இடையிலும் அரசாங்க பரப்பு எவ்வளவு தான் மனத்தை அழுத்திக்கொண்டு இருந்தாலும் நம் கழக உடன்பிறப்புகளை பார்க்கிறபோது இதயத்தில் சுமை குறைகிறது சுவை ஏறுகிறது என்கிறார் கலைஞர்.! வெளிநாடுகளைப் போல் அற்புத விஞ்ஞான மாற்றங்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என பாடுபட்டவர் கலைஞர் அவர்கள். என்ன செய்திருக்கிறோம்.? ஏழை எளியவர்களுக்கு என தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவர் கலைஞர்.! அப்படிப்பட்ட தலைவரின் சிந்தனையில் உதித்ததுதான் நெஞ்சுக்கு நீதி இந்த வரலாற்று சரித்திரத்தில் தன்னையே ஒரு பாத்திரமாக்கி வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் ஒரு ஏக்கத்தின் வரலாற்றையும் எழுத்துமிக்க வரலாற்று சம்பவங்களையும் அறிவியல் சாதனைகளையும் அதிர்ச்சி தரும் அரசியல் சம்பவங்களையும் கலைஞர் அவர்கள் விளக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் தன் நெஞ்சுக்கு தனக்குத்தானே நீதி வழங்கிக் கொள்ள வேண்டும். அதைப்போலவே ஒரு சமுதாயம், ஒரு கட்சி, ஒரு கூட்டம் தாங்கள் செய்யும் நல்லவை இயலுக்கோ தீவைகளுக்கோ தங்கள் நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொள்ள வேண்டும். ஒருவனை குறை கூறுவது எளிது அந்த நாவருக்கு இரண்டு கைதட்டல்கள் கிடைக்கலாம்.
ஆனால், குறை கூறியவரின் நெஞ்சுக்கு நீதி வேண்டாமா.? நான் நேர்மையானவன் என்று மாறு தட்டி பேசுவது எளிது நேர்மையை பற்றிய நீதி அதனால் வரும் தீர்ப்பு, தீர்ப்பை ஏற்பதும், எதிர்த்து அப்பீல் செய்வது ஆகியவை உண்டு! ஆனால், நெஞ்சுக்கு வழங்கப்பட்ட நீதிக்கு ஏது அப்பில்.? என மேற்கோள் காட்டியவர் கலைஞர் அவர்கள். தொடர்ந்து கலைஞர் அவர்களோடு பிறந்து தவழ்ந்து நடைபழகி, நடந்து ஓடி போராட்ட களம் கண்டு வெற்றிவாகை சூடிய வரலாறுகளை சுவைபடச் சொல்ல இருக்கிறோம்.
மீண்டும் சந்திப்போம்..
தென்றல் ஆ.சேகர்
திராவிட கருத்தியல் ஆய்வாளர்
உடுமலைப்பேட்டை