Headlines

நெஞ்சுக்கு நீதி!

இயற்றலும்,ஈட்டிலும்,காத்தலும் , காத்த வகுத்தலும் வல்ல அரசு!

புகழே நீ ஒரு நிழல் உன்னை பற்றி கவலைப்படாதவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பாய் என்ற வரிகளுக்கு ஏற்ப புகழின் உச்சிக்கு சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

உரைநடையில் அமர்ந்துள்ள நெஞ்சுக்கு நீதி சாமானிய மனிதர்களும் சரித்திரம் படைக்கலாம் என உணர்த்தி நிற்கும் ஒரு வரலாற்று காவியம் நெஞ்சுக்கு நிதியின் சிறப்பை விவரித்து சொல்ல இன்னொரு கம்பன் தான் பிறந்து வர வேண்டும் என்றாலும் உங்களுக்கு சுயபட தினம் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உங்கள் பார்வைக்கு படம் பிடிக்கிறேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் 80 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை ஆறு தொகுதிகளாக 4,171 பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார். 1924 பிறப்பு முதல் 2003 வரை எண்பது ஆண்டுக்கான வரலாறு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 15 வருட கால வரலாறு மீதமுள்ளது.தனது 60-வது வயதில்1985 ஆம் ஆண்டு நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கிய கலைஞர் அவர்கள், மேலும் நடப்பதற்காக திரும்பிப் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். அவருடைய நெஞ்சுக்கு நீதியை படிக்கும்போது அது ஒரு தனிமனித வரலாறு அல்ல, தமிழ் இனத்தின் வரலாறு தன்மானத்தின் வரலாறு உலக வரலாறு என அனைத்து பன்முக தன்மையை கொண்டதாக உள்ளது.

ஆறு தொகுதியில் மிகப்பெரியது ஐந்தாவது தொகுதி 134 பக்கங்களை கொண்டது மிகச்சிறியது ஆறாவது தொகுதி 551 பக்கங்களைக் கொண்டது முதல் தொகுதி 755 பக்கங்களைக் கொண்டது தனது பிறப்பு முதல் தென்னாட்டின் பெருநாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் இறப்பு வரை முதல் தொகுதியில் செயல்பட எழுதியுள்ளார் இந்த 4171 பக்கங்களையும் மொத்தமாக படிக்க முடியாதவர்களுக்கு தினந்தோறும் ஐந்து நிமிடத்திற்குள் நெஞ்சுக்கு நீதியை உங்கள் பார்வைக்கு படம் பிடிப்பதில் தமிழக விடியல் பெருமை கொள்கிறது. ஒரு அரசருக்குரிய கடமையாக தனது குரலமைத்தல் கலைஞர் அவர்கள் சொல்லும் பொழுது ஆட்சி நடத்துவோரின் கொள்கை நிலை நிறுத்தப்பட வேண்டுமானால் கோழைந்திகளின் கொள்கை சமூக நீதியும் சமத்துவமும் பொதுவுடமை மனம் கவிழ்வதாக இருக்க வேண்டும் என்றார்.!

வாய்மைக்கு வழி வைத்து வஞ்சகர் கோட்டைக்கு வெடிவைத்து 90 ஆண்டுகள் அஞ்சாவது போரிட்டு பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றிய பின் இவரோ படுகலமாய் போன பின்னும் பம்பரமாய் சுற்றி வந்த தந்தை பெரியாரின் கொள்கை வழி ஏற்று, உன்னை காக்க என்னை திறப்பேன் என ஒரு கோடி தமிழர் இளைஞர் பாடி நின்ற பாட்டுக்கு பெருந்தலைவன் தென்னாட்டின் பெருநாட்ஷா பேரறிஞர் அண்ணா அவர்கள் கரம் பற்றி கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கின்ற தாரக மந்திரத்தை தலையில் சுமந்து சாதி மதப்பித்து என்ற சனி தொலைந்தால் தான் சமத்துவம் என்ற ஞாயிறு பிறக்கும் என ஊர் ஊருக்கு சமத்துவபுரம் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றலாய் ஆரிய பகை முடித்து மதவாதத்தை வேரறுக்க புறப்பட்ட திராவிட சூரியன் மாண்புமிகு தளபதியார் அவர்களின் கூற்றுடின்ற மேல் வரணும் கூடிய இதற்கு ஆற்றல் அதுவே படை என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப படைக்கஞ்சா தளபதியாய் கலங்காணம் இளைஞர் அணியின் போர்படை தளபதி அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதியை சுவைபடச் சொல்ல இருக்கிறோம். ஆரிய மாயை கண்ட அருந்தவ புதல்வன் அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த தினமான இந்த செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை ஒட்டி தமிழக அரசியல் உங்கள் பார்வைக்கு படம் பிடிக்கிறது.

வாழ்க்கை என்பது கால்பந்து போன்றது அதை நாம் தான் உதைத்து விளையாட வேண்டும் யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாக இருந்தால் மற்றவர்கள் உதைப்பார்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள் வெற்றி தோல்விகள் இயற்கை தான் எனினும் விடாமுயற்சியும் கொள்கை உறுதியும் ஓயாத உழைப்பும் தேவை என்று எழுதிய கலைஞர் அவர்களிடம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமே என சிலர் கூறிய போது கலைஞர் அவர்கள் மிக கேலியாக கூறிய வாசகமே ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார். என்று எனது கல்லறை மீது எழுதப்படும் என்றார் அதுவே என்று அவர் கல்லறை மீது எழுதப்பட்டுள்ளது பெற்றெடுத்த தாய் தந்தை அறிவூட்டிய பெரியார் ஆளாக்கிய அண்ணா ஆகியோருக்கு காணிக்கையாகிய நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்கள் பார்வைக்கு தமிழக விடியல் இணையதளம் மூலம் கொண்டு வருவதில் பெரு முயற்சி கொண்டுள்ள அருமை சகோதரர் திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் கே.எம்.முபாரக் அலி அவர்களின் முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இனி தினந்தோறும் கலைஞர் அவர்களோடு உங்களை சந்திக்கிறோம் நாளை சந்திப்போம்.

தென்றல் ஆ.சேகர்

திராவிட கருத்தியல் ஆய்வாளர்
உடுமலைப்பேட்டை
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *