பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.
புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம் கிராமம் கொத்தனார் காலனியில் மாற்றுத் திறனாளிகளுக்காக 21-12-22 ல் ஒதுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி 39 பேருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடத்தி உதயநிதி ஸ்டாலின் இலவச மனை பட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய 14 இடத்தை அளந்து ஒப்படைக்கப்பட்டது. அதிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.மீதமுள்ள 25 நபர்களுக்கு இடத்தை அளந்து கொடுத்து ஒப்படைக்கவில்லை என்றும், தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா மட்டுமே கைவசம் உள்ளது.
என்றும் ஆகையால் 25 பேருக்கு இடத்தை அளந்து கொடுக்குமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர் . தற்போது அந்த இடத்தில் போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக அந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியில் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகவும் மூல காரணமாக இருப்பது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் சொந்தக்காரர் அப்துல் வாகிது என்ற பெயரில் இருந்த இலவச வீட்டு மனையை போலி ஆவணங்கள் மூலம் அப்துல் வாகிதுவை ஏமாற்றி அந்த இடத்தில் 30 லட்சத்திற்கு வீடு கட்டி உள்ளார் என மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா வைத்திருக்கும் 25 நபர்களுக்கு இடத்தை அளந்து ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 21.10.22 அன்று பழனி தாலுகா அலுவலகம் முன்பு தமிழக அரசு கொடுத்த “பட்டா எங்கள் கையில் எங்கள் இடம் யார் கையில்” என்ற தலைப்பில் கோசம் எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மீண்டும் மனு பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கோபி நாத் மற்றும் அப்பு என்ற வெங்கடேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ,அரசு அலுவலகம் என்று சென்றால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி