செப் 12 கன்னியாகுமரி
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் இன்று காலை கேரளாவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 15 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடைபெற்று வரும் காரணத்தால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிந்த பின்னர் தான் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
