பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது காந்திகிராம வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செ. அமலா திட்ட விளக்க உரையாற்றினார்.
இதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ஆ. காளிமுத்து இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் அங்ககச் சான்று பெறும் முறைகள் குறித்தும் அங்ககசான்று பெற விரும்பு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் சின்னச்சாமி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் காந்திகிராம வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு முறைகள், சிறுதானிய அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இதையடுத்து விவசாயிகளுடன் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. இதில் வைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியில் வேளாண்மை துறையின் சார்பில் உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், நுண்ணூட்டங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பூம்பொழில் இயற்கை விவசாயி குழு, வாகா ஆர்கானிக், ஜேபி ஃபுட்ஸ் ஆகியோரின் மூலமாக அவர்களது மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் காந்திகிராம வேளாண் பல்கலைக்கழத்தைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இக்கண்காட்சியின் இறுதியாக ஆத்தூர் வட்டாரத்தின் வேளாண்மை அலுவலர் ம.விக்னேஸ்வரன் நன்றியுரை ஆற்றினார் இக்கூட்டத்தில் ஆத்தூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் க.பெருமாள், உதவி விதை அலுவலர்கள் அரிராமன், சேதுராமன், உதவி வேளாண்மை அலுவலர்கள் த.பத்ரி நாராயணன், அ. சாகுல் ஹமீது, ரா.சசிக்குமார், அந்தோணி கிரிஸ்டியா, சபரீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அட்மா திட்ட பணியாளர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசன்னா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெய சுப்பிரமணி மற்றும் வேல்முருகன், PKVY திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.