“பெண்களின் பாதுகாப்பு, மனித சமுதாயத்தின் பொறுப்பு!” என்னும் தலைப்பில், தேசிய அளவில் நடைபெற்று வரும், முனைப்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான விமன் இண்டியா மூவ்மெண்ட் [WOMEN INDIA MOVEMENT] சார்பாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடி “பைத்துல் ஸலாம்” சமுதாய நலக்கூடத்தில் வைத்து, நகர தலைவி என். ஹமீதா அக்பர் தலைமையில், “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது.
நகர செயற்குழு உறுப்பினர் சைபுநிஷா பேகம், அனைவரையும் வரவேற்று, பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின், திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் என்ஜினியர் “களந்தை” மீராசா, கருத்தரங்கினை துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின், நாங்குநேரி தொகுதிக்கான பொறுப்பாளர் ஆசிக், நகர செயலாளர் சேக், “விமன் இண்டியா மூவ்மெண்ட்” நகர துணை செயலாளர் ஜெசிமா, நகர துணை தலைவி மீராள், ஆகியோர், முன்னிலை வகித்தனர். வள்ளியூர் “பெட்”[PET] பொறியில் கல்லூரியின் உதவி பேராசிரியை “முனைவர்” முத்து கதிஜா, மேலிடை செவிலியர் பொன்மணி,ஏர்வாடி பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பி. ஹலிமா ஆகியோர், “சிறப்பு” அழைப்பாளர்களாக பங்கேற்று, உரை நிகழ்த்தினர். விமன் இண்டியா மூவ்மெண்டின்,புறநகர் மாவட்ட தலைவி எம். மும்தாஜ் ஆலிமா, “விமன் இண்டியா மூவ்மெண்ட்” மாநில செயற்குழு உறுப்பினர் என். ஜன்னத் ஆலிமா ஆகியோர் “கருத்துரை” வழங்கினர். இந்த நிகழ்சிசின் போது, சிறுமியர்கள் சிலர், தற்காப்பு கலைகளுள் ஒன்றான “சிலம்பம்” விளையாட்டு போன்ற விளையாட்டுகளை, மேடையில் நிகழ்த்தி காட்டினர். நிகழ்ச்சியில், “விமன் இண்டியா மூவ்மெண்ட்” செயற்குழு உறுப்பினர்கள், பர்ஹானா, பர்வீன், ரகுமான் பீவி உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக,”விமன் இந்தியா மூவ்மெண்ட்” நகர செயலாளர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ், நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.