மதுரை, செப் : 20
2012் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் வரிச்சியூர் செல்வம்(57) -ஐ வத்தலகுண்டு-ல் வைத்து கைது செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்
திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
