தென்காசி ஜனவரி 8
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலமாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் இப்பள்ளியானது வல்லம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகளை கல்விப் பயன் அளித்து வருவதில் சிறந்த பள்ளியாக திகழ்ந்து வருகிறது.
இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் சிறந்த கல்வியும் நல் ஒழுக்கத்தையும் இந்த பள்ளியின் உடைய ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வியை அளித்து வருகின்றனர் இங்கு சுமார் 900 பேர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பள்ளியின் நிர்வாகியாக விசுவாசம் பணியாற்றி வருகிறார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் குணசேகரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அழகு தமிழ் சங்கர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தர்ம செல்வி விவசாய அணி துணை அமைப்பாளர் அண்ணாவி கிளைக் கழகச் செயலாளர் ராஜா முத்துக்குமார் செல்வம் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆவுடையம்மாள் ஜமீன் பாத்திமா ஒன்றிய பிரதிநிதி சாகுல் ஹமீது வல்லம் செல்வம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்.
