திருநெல்வேலி, செப். 26:-
திருநெல்வேலி, செப். 26: சென்ற மாதம் (ஆகஸ்ட்) 15-ஆம் தேதி முதல், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மாநிலம் முழுவதும் செயலபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என, அனைத்து இடங்களிலும், சிறப்பு முகாமில் நடத்தப்பட்டு, அந்தந்த பகுதி மக்களிடமிருந்து, துறை வாரியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது 45 நாட்களில், சாதகமான தீர்வுகள் காணப்படுகின்றன.
ஒருசில மனுக்களுக்கு உடனடியாகவும், தீர்வு காணப்படுகின்றன. அந்த அடிப்படையில், ஓரிரு நாட்களுக்கு மன்னர், திருநெல்வேலி புறநகர் பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்களில்,50 சதவிகித மானியத்தில், நாட்டுக்கோழி வளர்க்கக் கோரி 15 மனுக்களும், மின்சாரத்தால் இயங்கும் புல் வெட்டும் இயந்திரங்களும், வழங்கக்கோரி 50 மனுக்களும் பெறப்பட்டன.
அவ்வாறு மனு கொடுத்த விவசாயிகளுக்கு, இன்று (செப்டம்பர். 26) திருநெல்வேலி சந்திப்பு கால்நடை பன்முக மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கால்நடை வளர்ப்போர் 15 பேருக்கு புல் வெட்டும் இயந்திரங்களையும், 10 பேருக்கு நாட்டுக்கோழி வளரப்பதற்கான மானிய ஆணைகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் வி. சங்கர நாராயணன், துணை இயக்குநர் டாக்டர் சு. ராஜ ராஜேசுவரி, உதவி இயக்குநர் டாக்டர் சு. சுமதி, வீ. போன்மணி, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் ஐ. மாரியப்பன், டாக்டர் கே. பொன்வேல்துரை, டாக்டர் இரா. சரண்யா ஆகியோர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
