செப் 24 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் :
தமிழகத்தில் அரசியல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், அடுத்த மாதம் அக்டோபர் 11-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அவரது விஜயத்தின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, உறுதியான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் வெளியான தகவலின்படி, விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி பயணம் செய்வார் என கூறப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென அவரது திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதால், அன்றைய தினம் அவர் வருகை தருவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார நிகழ்வுகளில் விஜய் பங்கேற்க வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விஜய் வருகை தொடர்பான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்ட நிருபர் : பாவலர் ரியாஸ்.
