பழனி : டிசம்பர், 10
பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி பெறும் கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பஞ்டி, எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து காலிக்குளங்களுடன் வந்த பெண்கள் மற்றும் விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் தெரிவித்ததாவது : வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற இரண்டு நீர்வழிப்பாதை உள்ளது. இதில் தற்போது பாப்பாகுளம், பட்டி குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பாதையை அடைத்து விவசாய பயன்பாடு இல்லாத மற்றொரு நீர்வழிப்பாதையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டிகுளம் நீரால் பாசன வசதி பெறும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
எனவே பாப்பா குளம் பட்டிகுளம் ஆகியவற்றிற்கு நீர் திறந்துவிட கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக தெரிவித்தனர். எனவே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் முற்றைப் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இன்று முதல் பாப்பா குளம் மற்றும் பட்டி குளம் ஆகியவற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பெண்கள் கலைந்து சென்றனர். பெண்கள் மற்றும் விவசாயிகள் விடிய போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகளுக்கு : நா.ராஜாமணி – 89733 50663.
