தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் இனிவரும் காலங்களில் சுற்றுலா தளங்களில் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதி கூறினார்இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் எம் ஏ எம் ஷெரிப் உட்பட ஏராளமான திமுகவினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்.