மடத்துக்குளம் : நவம்பர்,06.
மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
