கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல்நிலை பரிசோதனை பணிகளை இன்று (11.12.2025) நேரில் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொகுதியில் அமைந்துள்ள EVM கிட்டங்கியிலேயே இந்த பரிசோதனைகள் நடைபெற்றன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 5594 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4040 கட்டுப்பாட்டு கருவிகள், 2802 VVPAT கருவிகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.
இதில், 900 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று (10.12.2025) விருதுநகர் மாவட்டத்திற்கு, கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.
மீதமுள்ள இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன.
முதல்நிலை பரிசோதனை – முழுத் திறனில் செயல்பாடு 9 சிறப்பு நிபுணர்களைக் கொண்ட குழு, கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களை ஒருங்கிணைந்து பரிசோதனை செய்கின்றது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பரிசோதனைகள் நடைபெற்றன.
அனைத்து கருவிகளும் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஆய்வில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் & வருவாய் அலுவலர் திருமதி அ. பூங்கோதாய்தேவி, உதவி ஆட்சியர் பயிற்சி திரு. ராகுல் குமார், இ.ஆ.ப., நாகர்கோவில் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் செல்வி சு. காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் தநிர்முக உதவியாளர் திருமதி கு. சுகிதா,
தேர்தல் தனி தண்டாட்சியர் திரு. வித்யாநாத், உசூர் தாலுகா தாசில்தார் திரு. சுப்பிரமணியன்,
மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் — திரு. வீரமுத்து (தி.மு.க), திரு. ஆனந்த் (தி.மு.க), திரு. இராமகிருஷ்ணன் (தி.மு.க), திரு. விஜயகுமார் (பி.ஜே.பி), திரு. பன்னீர்செல்வம் (இ.த.கா), திரு. பிரபு (நா.த.க), பாவலர் ரியாஸ் (வி.சி.க), திரு. மதனாஜ் (என்.பி.பி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
