Headlines

கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு.

கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய ஈத்கா மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உலகம்

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. ரெ.மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பூங்காவை திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் அவர் உரையாற்றுகையில், “இப்பூங்கா அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியுடன் நேரத்தை கழிக்கவும் பெரிதும் உதவும். நகரின் பசுமை சூழலை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இது அமையும்,” என தெரிவித்தார்.

நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரள்

இந்த நிகழ்வில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பாத்திமா ரிஸ்வானா, பியாசா ஹாஜிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அணி நிர்வாகிகள்: ஹாஜி பாபு, ஹிதயாத் வட்ட செயலாளர்கள் அன்சாரி, இடலை சாகுல், இடலை செய்யது கழக நிர்வாகி சிவராமலிங்கம்.

ஜமாத் நிர்வாகிகள் பீர் முஹம்மது, இப்ராஹிம், ஜின்னா, ஆப்தீன், பாபு ஹுசைன், ஜாகீர் ஹுசைன் உள்ளிட்டோர் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சமூக நலத்திற்கான முக்கிய முயற்சி

புதிதாக அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், அப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு தேவையை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *