உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ‘உலக குவாண்டம் தினம்’ (World Quantum Day) கொண்டாடப்படுகிறது.
அணுக்களுக்குள் இருக்கும் மிக நுண்ணிய துகள்களின் செயல்பாடுகளை விளக்கும் குவாண்டம் இயற்பியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
இயற்கையின் அடிப்படை ரகசியங்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத் தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங், அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கருவிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குவாண்டம் மெக்கானிக்ஸில் மிக முக்கியமான மாறிலியான பிளாங்க் மாறிலியின் (Planck constant) மதிப்பை (4.135×10 −15 eV⋅s) நினைவுகூரும் வகையிலேயே, அந்த எண்களைக் கொண்டு ஏப்ரல் 14 (4.14) என்ற தேதி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
