திருநெல்வேலி, நவ.10:-வருடம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் தாமிரபரணி நதியில் சாக்கடை [கழிவு நீர்] கலப்பதாக கூறப்பட்ட வழக்கில், உண்மை நிலையை கணாடறிவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் G.R.சுவாமி நாதன் மற்றும் P. புகழேந்தி ஆகிய இருவரும், [நவ.10] திருநெல்வேலிக்கு வருகை தந்து, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, உடையார்பட்டி, குறுக்குத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றங்கரைகளில் இருந்தவாறே, தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது நீதிபதிகளுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, நெல்லை மாநகராட்சி ஆணையர் N.O.சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் இளையராஜா உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். “தாமிரபரணி நதியில் சாக்கடை [கழிவு நீர்] கலக்காதவாறு, நிலையான பணிகளை மேற்கொள்வதற்கு 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டும்!- என்று நீதிபதிகளிடம், மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். தாமிரபரணி ஆறு மாசுபடுவது தொடர்பாக, உயர்நீதி மன்ற நீதிபதிகள் நெல்லையில் ஆய்வு செய்த சம்பவத்தால், திருநெல்வேலி மாநகரம் முழுவதிலும், மிகுந்த பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.