அக் 09; கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து அமுதாராணி அவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால், அந்தத் தடையாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும், மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்) அவரை தலைவராக செயல்பட அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமுதாராணி அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சார்ந்தவர் என்பதாலேயே மாவட்ட ஆட்சியர் நிதானம் காட்டுகிறார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
தலைவரை தகுதி நீக்கம் செய்தபோது வேகமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட (ஆட்சியர்) நிர்வாகம், இப்போது உச்சநீதிமன்றத்தின் தடையாணையை ஏன் செயல்படுத்தவில்லை (மதிக்கவில்லை) என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தேரூர் பேரூராட்சியில் முறையான நிர்வாக பணிகள் நின்றுவிட்டன என பொதுமக்கள் குற்றம்சாட்டி, “மக்கள் நலன் கருதி, உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து அமுதாராணி அவர்கள் மீண்டும் தலைவராகச் செயல்பட மாவட்ட (ஆட்சியர்) நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்”
எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்.
