Headlines

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 12.10.2024 அன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் (வயது 41) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 136 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடசேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35) என்பவரின் பெட்டிக்கடையில் சுமார் 9 கிலோ குட்கா மற்றும் ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிரத்தினம் (72) என்பவரின் கடையில் சுமார் 500 கிராம் குட்கா பொருட்களும், ஆம்பூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் (42) என்பவரது கடையில் சுமார் 21.1/2 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்கண்ட எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

தனிப்படை குழுக்களின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அவர்களின் வங்கி கணக்கை முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை குறித்த தகவல்களை 91599 59919 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதில் தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும்.

என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *