நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை அமைத்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்பொழுது அந்த சாலை குண்டும் குழியுமாகி மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு பேருந்து வசதியும் இல்லை அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட மற்றொரு மாற்று வழியும் இல்லை இருக்கின்ற தார் சாலையும் பழுது நிலையில் உள்ளது. இங்கே சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி குழந்தைகள் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர் இத்தகைய தார் சாலையினால் அவர்கள் நடந்து செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது எனவும். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஊர் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஊர் பொதுமக்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கும் பயன்பெறுமாறு உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தரக்கோரி ஊர்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட செய்தியாளர் அருள்தாஸ்
